குறுகிய காலத்திற்குள் கோவிட் தொற்றை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

குறுகிய காலத்திற்குள் கோவிட் தொற்றை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது மட்டுமே தீர்வாக இருக்கும் என்று இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் துணைத் தலைவர்- உட்சுரப்பியல் நிபுணர் மணில்க சுமனதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை பெரும்பாலும் நான்காவது அலையில் இருப்பதாகவும், சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாடு ஒரு பேரழிவு நிலைக்கு தள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நாட்டின் தடுப்பூசி இயக்கத்தை விட வைரஸ் வேகமாக பரவுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த இடைவெளியில். குறுகிய கால பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதே ஒரே வழி, என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிலைமை தொடர்பில், அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் மற்றும் நெருக்கடியை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சுமனதிலக்க கோரியுள்ளார்.

இதற்கிடையில், கோவிட் இறப்புகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, நேற்று பதிவான இறப்புகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் மூன்று பேர் வைரஸால் இறக்கின்றார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கோவிட்  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் உள்வாங்கும் திறன் அதிகபட்சத்தை எட்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.