கொழும்பில் மீண்டும் பரவும் கொரோனா…ராஜகிரியவைச் சேர்ந்த 30 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைப்பு..!!

கொழும்பு ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரத்தச் சேர்ந்த 30 பேர் கண்டகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை வெலிசற வைத்தியசாலையின் விடுதி இலக்கம் 11 மற்றும் 12 இல் தனிமைப்படுத்தப்பட்ட 46 நபர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இலங்கை விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷன் விஜேசிங்க கூறும் போது;இந்தக் குழு விமானப்படை அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒழுங்கு நடைமுறைகளை நிறைவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.