மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் !

அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மீள ஆரம்பிக் கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய காரணங்கள் அல்லாமல் வேறு காரணங்களுக்காக மாகாண எல்லைகளைக் கடக்கும் நபர் கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் தெரித்தார்.

அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அரச பணி யாளர்களுக்கு மாத்திரமே திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஆயினும் நெருங்கிய உறவினர்களின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காகச் செல்பவர்களும் அனுமதிக் கப்படுவார்கள் எனவும் கூறினார்.