யாழ். பருத்தித்துறை பகுதியில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் திடீர் மரணம்

யாழ். பருத்தித்துறை,ஊரணியைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று மதியம் கோவிட் தடுப்பூசியினை ஏற்றிய நிலையில் நள்ளிரவு மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண் நேற்றைய தினம் தடுப்பூசியின் முதலாவது செலுத்துகையை பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு கோவிட் தொற்று இருந்ததா என கண்டறிவதற்கு, அவரது சடலத்தின் மீது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.