பற்களின் இடையே இடைவெளி இருந்தால்.. இப்படி ஒரு அதிர்ஷ்டம் இருக்குமாம்!

புன்னகை மிக்க ஒருவருடைய முகம் மற்றும் அவர்களுடைய அழகைக் கூட்டிக் காட்டும். ஆனால் பல் வரிசையில் அதிக இடைவெளி இருந்தால் கவலைப்பட வேண்டாம்.ஆனால் அதிலும் அதிர்ஷ்டங்கள் உண்டு. நிறைய பேருக்கு பற்களின் இடைவெளி பிடிக்காது தான். ஆனால் அது மிகுந்த அதிர்ஷ்டமுடையது.

பற்களில் உள்ள இடைவெளிகளை சரிசெய்ய மருத்துவர்களிடம் செல்கிறீர்கள் என்றால் உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்களே தானாக முன்வந்து இழக்கிறீர்கள் என்று பொருள்.எந்தெந்த பற்களில் இடைவெளியில் என்ன மாதிரியான கணமும் நன்மையும் உண்டாகும்.

பற்களில் முன்பக்க பற்களில் இடைவெளி இருந்தால் அவர்கள் நம்பிக்கையானவர்கள் மற்றும் மிகுந்த தைரியமுடையவர்கள் என்று பொருள். ரிஸ்க் எடுப்பதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள்.பற்களுக்கிடையில் இடைவெளி இருப்பவர்கள் வெற்றியை அதிகம் விரும்புபவர்கள். வெற்றியை ருசிப்பதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருப்பதால், எந்த செயலைச் செய்தாலும் அதில் அதிக முயற்சி செய்து வெற்றியை ஈட்டுவார்கள்.

கற்பனை வளம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். நாள் முழுவதும் பேசச் சொன்னாலும் பேசிக்கொண்டே இருப்பார்கள். வாய் ஓய்வதே கிடையாது. ஆனால் பேச்சு அத்தனையும் வெற்றியாய் மாற்றிக் கொள்ளும் ஆற்றலுடையவர்களாக இருப்பார்கள்