இந்தியாவுக்கு அண்மித்த அந்தமான் தீவுப் பகுதிகளில் நிலநடுக்கம் – இலங்கையின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் கரையோரத்தில் வாழ்கின்ற மக்களும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கு அண்மித்த அந்தமான் தீவுப் பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்துக்கு முன்பாக  6.5 றிக்ரர் அளவில் 95 கிலோமீற்றர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்மித்தும் வாழ்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பில் வெளியிடப்படும் அறிவித்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகிறோம். மேலும் இது தொடர்பிலான புதிய தகவல்கள் கிடைத்தவுடன் ஊடகங்களின் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.