இலங்கைக்கு ஐந்தாவது கட்டமாக பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டது

பைசர் தடுப்பூசியின் மற்றொரு அளவுகள் இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

104,000 பைசர் தடுப்பூசிகளின் அளவுகள் 18 பெட்டிகளில் உள்ளடக்கிய வகையில் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

கட்டார் ஏயர்வேஸ் விமானம் மூலமாக இந்த அளவுகள் இன்று அதிகாலை 2.15 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

இலங்கைக்கு ஐந்தாவது கட்டமாக பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.