நாட்டின் பல மாகாணங்களில் இன்று காலநிலை மற்றம் !

நாட்டின் பல மாகாணங்களில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.