யாழ் பிரபல ஆலயத்தில் சுவாமி காவிய இருவருக்கு கொரோனா!

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் விருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில் மகோற்சவ திருவிழாவில் சுவாமி காவிய பக்தர்களில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தொிவிக்கின்றன.

இதனையடுத்து தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையினை பிரதேச சுகாதாரத் தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மாவிட்புரம் கந்தசுவாமி கோவில் திருவிழா வழமை போன்று நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.