உணவு பொருட்கள் தொடர்பில் கனடா மக்களுக்கு வழக்கப்படுள்ள அறிவித்தல் !

குறிப்பிட்ட பிரபல நிறுவனங்களின் உறைந்த மாம்பழங்களை பயன்படுத்த வேண்டாம் என கனடாவின் உணவு ஆய்வு முகமை (CFIA) கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையால் பல நிறுவனங்களும் தங்கள் பொருட்களை திரும்பப்பெற தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்புடைய நிறுவனங்களின் உறைந்த மாம்பழங்களில் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து கனடிய உணவு ஆய்வு முகமை நான்கு பிரதான நிறுவனங்களின் உறைந்த மாம்பழங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Nature’s Touch, Compliments, Irresistible மற்றும் President’s Choice ஆகிய நிறுவன உறைந்த மாம்பழங்கள் உண்ணத் தகுந்ததல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் 2022கு முன்னர் பயன்படுத்த கோரியுள்ள பொருட்களையும் தவிர்க்க கேட்டுக்கொண்டுள்ளனர். குறித்த பொருட்கள் கியூபெக், ஒன்ராறியோ, சஸ்காட்செவான், மனிடோபா, நியூ பிரன்ஸ்விக் மற்றும் நோவா ஸ்கோடியா ஆகிய பகுதிகளிலும், எஞ்சிய பிராந்தியங்களில் விற்கபடலாம் என தெரிவித்துள்ளனர்.

ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தொற்று பொதுவாக காய்ச்சல், பொதுவான உடல்நலக்குறைவு, பசியின்மை, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று உபாதைகளால் வெளிப்படுகிறது. இது மஞ்சள் காமாலைக்கும் காரணமாக அமையும்.

மேலே குறிப்பிட்ட நிறுவனங்களின் உறைந்த மாம்பழம் சாப்பிட்ட 50 நாட்களுக்கு பின்னர் நோய் அறிகுறிகள் தெரிய வரலாம். இந்த நிறுவனங்களின் உணவுகளை உட்கொண்ட மக்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் உரிய சிகிச்சை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.