அடுத்த திங்கட்கிழமை தொடக்கம் (02ஆம் திகதி) அனைத்து அரச நிறுவனங்களும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திங்கட்கிழமை முதல் வழமைபோல அனைத்து அரச ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
இத்தகவலை அவர் , மாகாண சபைகள் மற்றும் அரச சேவை செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.