பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள உலகில் மிக சிறிய பசு!

வங்க தேசத்தின் தலைநகர் டாக்கா அருகே உள்ள பண்ணையில் வளர்க்கப்படும் பசு மாடு ஒன்று உலகத்திலேயே மிகவும் சிறிய பசு என்ற பெருமையை பெற்றுள்ளது.

சாரி கிராமம் என்ற பகுதியில் வளர்க்கப்படும் குறித்த பசுவிற்கு ராணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வெறும் 51 சென்றிமீட்டர் உயரம் கொண்ட இந்த பசு 26 கிலோகிராம் எடை கொண்டதாகும்.

இதற்கு முன்னதாக கேரளாவை சேர்ந்த மாணிக்கம் என்ற பசு 61 சென்றிமீட்டர் உயரத்துடன் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.