ஊரடங்கால் அல்லலுறும் கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய செய்தி….இலவச பாண் விநியோகம்..!

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், கொழும்பு மாவட்ட மக்களுக்கு இலவசமாக பாண் விநியோகம் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடைச் சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பேக்கரி ஊடாக தனியார் நிறுவனம் ஒன்று இணைந்து இந்தத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.கடந்த 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் ஊடாக கிராண்ட்பாஸ், மட்டக்குளி உள்ளிட்ட இடங்களில் பாண் விநியோகம் இடம்பெறுகின்றதாகவும் கூறப்படுகின்றது.