டெல்டா வைரஸ் திரிபானது சுமார் 132 நாடுகளுக்கு பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

கொரோனா டெல்டா வைரஸாக வடிவம் மாறி சுமார் 132 நாடுகளுக்குப் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் 30 சதவீத பாதிப்பு அமெரிக்காவிலும் 25 சதவீத பாதிப்பு மேற்கு பசிபிக் நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏழு நாட்களில் அமெரிக்காவில் சுமார் 5 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரேசிலில் 3 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கும் இந்தோனேசியாவில் 2 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கும் பிரிட்டனில் 2 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கும் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஒருவாரத்தில் 2 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.