ஆபத்து நிறைந்த பிரதேசமாக மாற்றம் பெறும் கொழும்பு..!! ராஜகிரிய பிரதேசத்திற்கு மாறிய கொரோனா.!!

கொழும்பு ராஜகிரிய பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, கொழும்பு நகருக்கு உட்பட்ட பகுதிகளில் மேலும் ஆபத்து அதிகரித்துள்ளது.

பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து இந்த பிரதேசத்தில் இன்று காலை விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன் வைரஸ் தொற்றியவர்கள் இருக்கின்றனரா என்பதை தேடி வருகின்றனர்.அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்ட நபருன் பழகிய நபர்களை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.ராஜகிரிய பண்டாரநாயக்கபுர பிரதேசமானது, முன்னர் கொரோனா நோயாளிகள் பலர் அடையாளம் காணப்பட்ட கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை போன்று சன நெருக்கடி நிறைந்த பிரதேசமாகும்.பண்டாரநாயக்க மாவத்தையை அடுத்து பண்டாரநாயக்கபுரவுக்கு மாறிய கொரோனா வைரஸால் இந்த பிரதேசத்தில் மேலும் கொரோனா நோயாளிகள் இருக்கலாம் என்பதால், அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.