சிறியவர்கள் முதல் பெரியர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது தலைசுற்றல்.
சரியான நேரத்திற்கு உணவு உண்ணாதது மற்றும் உடலுக்கு தேவையான ஓய்வு கொடுக்காததே தலைசுற்றலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
தலைசுற்றல் நோயை கவனிக்க தவறிவிட்டால் நீரிழிவு நோயை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு.
தலைசுற்றிலின் உண்மையான அறிகுறிகள் என்ன?
- தலைசுற்றும் பொழுது இரத்த அழுத்தம் சமமான நிலையில் இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.
- இதயத்துடிப்பு வேகமாக செயல்படும். பக்கத்தில் இருக்கும் பொருள்கள் கூட கண்களுக்கு மங்கலாக தெரியக்கூடும்.
- உடலில் எப்போழுதும் ஒரு வித சோர்வு இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி குமட்டல் வாந்தி போன்றவை ஏற்படும்.
தலைசுற்றலில் இருந்து நம்மை காத்துக்கொள்வது எப்படி?
- சரியான நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
- வேலை பளு அதிகமாக இருந்தாலும் உடலுக்கு ஓய்வு என்பது மிகவும் முக்கியம்.
- தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் வலிமை பெறுதல் மற்றும் இரத்த ஓட்டம் சமமாக இருப்பதால் தலைசுற்றல் ஏற்படாது.