இலங்கைக்கு சுமார் 720,000 அஸ்ட்ரா சென்கா கோவிட் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன

இலங்கைக்கு சுமார் 720,000 அஸ்ட்ரா சென்கா கோவிட் தடுப்பூசிகள் சனிக்கிழமை கிடைக்கப்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

728460 அஸ்ட்ரா சென்கா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் எனவும், இது கோவெக்ஸ் உதவித் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறுவதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முதல் மாத்திரையாக அஸ்ட்ரா சென்கா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இந்த தடுப்பூசி கையிருப்புக்கள் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தடுப்பூசியின் முதல் மாத்திரையை பெற்றுக்கொண்ட 490,000 பேருக்கு இரண்டாம் மாத்திரை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவேக்ஸ் உதவித்திட்டத்தின் கீழ் ஜப்பான் இலங்கைக்கு 1.45 மில்லியன் அஸ்ட்ரா சென்கா தடுப்பூசி மாத்திரைகளை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மாத்திரை அஸ்ட்ரா சென்கா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாம் மாத்திரைக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.