கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலை 9 மணி முதல் குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் 50 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.