லண்டனில் யாழ் இளைஞனின் மோசமான செயல் ! பொலிஸில் வசமாக சிக்கிய சம்பவம்

பிரித்தானியாவிலுள்ள இளைஞன் ஒருவர், வெள்ளவத்தையிலுள்ள பெண்ணொருவரிடம் பெருந்தொகை பணம் பெற முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் லண்டனில் வசித்து வரும் நிலையில், குறித்த பெண்ணிடம் காதல் என்ற பெயரில் ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவு ஏற்பட்ட நிலையில், குறித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி 17 இலட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணிடம் பணம் பெற முயற்சித்த இருவர் கொழும்பு கொம்பனிதெரு யூனியன் பிளேஸ் பிரதேசத்தில் கப்பமாக பணம் பெற முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் இளைஞனுக்கும் வெள்ளவத்தை பெண்ணுக்கும் தொடர்பு இருந்த காலப்பகுதியில் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடவுள்ளதாக எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் தொடர்பில் கொழும்பிலுள்ள சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன் முதற்கட்டமாக 7 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு இந்த பெண் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியாவில் உள்ள சந்தேக நபரின் பிரதிநிதிகள் இருவர் பணத்தை பெற வந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.