பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சுக்கு சற்று முன்னர் அனுப்பப்பட்டுள்ள மிக முக்கிய தகவல்!

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில், பாடசாலைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கான சரியான சூழ்நிலை இல்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க கல்வியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது பாதுகாப்பானதாக இருக்காது என எச்சரிக்கிக்கப்பட்டுள்ளது.இந்நிலையிலேயே, சுகாதார சேவைகள் பணிப்பாளர் இது தொடர்பில் கல்வியமைச்சுக்கு அறிவித்துள்ளார்.இதேவேளை, பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் செய்யப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து விசேட சுற்றறிக்கையொன்றை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக அலுவலகம் கல்வியமைச்சுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சுற்றறிக்கையில், பாடசாலைகளை சுத்தப்படுத்துவது ,கிருமிநாசினிகளை தெளிப்பது , மாணவர்களை சமூக இடைவெளிக்குள் அமரவைப்பது உட்பட பல விடயங்களை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முன்னதாக எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.