கொரோனா காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா? இந்த மூலிகைகள் தொடர்ந்து எடுத்தால் நல்ல பயன் கிடைக்கும்!

நோய் எதிர்ப்பு சக்தி என்பது நமது உடலின் பாதுக்காப்பு அம்சமாகும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து இது உடலை பாதுக்காக்கிறது.

இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கை மூலிகைகள் உணவுகள் போன்றவற்றை எடுப்பது நல்லது.

அந்தவகையில் தற்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சில மூலிகைகளை இப்போது பார்ப்போம்.

கற்பூரவல்லி

கற்பூரவல்லியுடன் இதனுடன் மஞ்சள் மற்றும் இஞ்சி அல்லது மிளகு போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகையை சேர்ப்பதால் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இது உதவும்.

இந்த கலவையுடன் எலுமிச்சை சேர்த்து ஒரு சூடான பானத்தை உண்டாக்கி அருந்தலாம். ஆனால் இந்த மூலிகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சீந்தில் 

[KUNT3 ]

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சீந்தில் தாவரத்திற்கு முக்கிய பங்குண்டு. இது முக்கியமாக காய்ச்சல் மற்றும் எரியும் உணர்வு, அதிக தாகம், பசியின்மை, குமட்டல் மற்றும் தொற்றுநோய்களுடன் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுகிறது. மேலும் இது நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

அன்னாசி பூ

அன்னாசி பூ வைரஸ் தடுப்பு விளைவுகளை ஏற்படுத்துவதால் இது முக்கியமான மூலிகையாகும். ஒருவர் ஒன்று அல்லது இரண்டு அன்னாசி பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடிக்கலாம்.

அஸ்வகந்தா

அழுத்தத்தை எதிர்த்து போராட உதவக்கூடிய ஒரு மூலிகையாக அஸ்வகந்தா உள்ளது. இது சகிப்பு தன்மையையும் வலிமையையும் அதிகரிக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வலு சேர்க்கிறது. மேலும் நல்லப்படியான தூக்கம் வருவதற்கு இது உதவுகிறது.

கற்பூரவல்லி பச்சடி

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை விட்டு சூடாக்கவும். அதில் மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து பின்னர் தேங்காய் சேர்த்து வதக்கவும். கற்பூரவல்லி இலையையும் அதில் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து சட்னி போல் அரைக்கவும். பிறகு அதில் தயிர் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். ஒரு கடாயில் நெய் அல்லது தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி அதில் அரை டீஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாயை சேர்த்து வதக்கி அதை பச்சடியில் சேர்க்கவும் .