நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றுக்கு பலி

நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, நேற்றைய தினம் (25) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,147 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 297,534 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 269,007 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.