6 ஆம் எண்ணில் பிந்தவரா நீங்கள்? உங்களுடைய பொதுவான குணங்கள் இவைதான்!

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆறாம் எண்காரர்களாவர். இவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் உலகத்தில் உள்ள எல்லா சுகத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள். இவர்களுக்கு வரும் பிரச்சனைகள் கூட இவர்களே சமாளிக்கக் கூடியதாகத் தான் இருக்கும். எந்த விஷயத்திலும் அவசரப் பட்டு செயல்பட மாட்டார்கள். எல்லா விஷயத்தையும் நிதானமாக கையாள்வார்கள்.

துக்கத்தையும், சந்தோஷத்தையும் சரி சமமாக பாவிக்கத் தெரிந்தவர்கள். இவர்கள் எதைக் கண்டும் அவ்வளவு எளிதில் அஞ்ச மாட்டார்கள். தங்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொள்வார்கள். வலிமையான அதே சமயம் வசீகரமான உடலமைப்பை பெற்று இருப்பார்கள். நல்ல எண்ணங்களைக் கொண்டவர்கள். தங்கள் அழகுக்கென்று தகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். எல்லோரிடமும் இனிமையாகப் பேசுவார்கள். எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருப்பார்கள்.

தன்னை சுற்றி இருக்கும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனம் கொண்டவர்கள். பார்பதற்கு சாதுவாக காட்சியளிப்பார்கள். பிறர் மெச்சும்படியான நல்ல பழக்க வழக்கங்களை உடையவர்கள். கடமை மற்றும் கண்ணியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். எப்படிப்பட்ட பணத் தட்டுப்பாட்டையும் எளிதில் சமாளித்து விடுவார்கள். கொடுக்கல், வாங்கலில் இவர்கள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

இவர்கள் பொதுவாக யாருடனும் அவ்வளவு எளிதாகப் நெருங்கி பழக மாட்டார்கள். ஆனால் ஒருவரை பிடித்து விட்டால் உயிரை கொடுக்கத் கூட தயங்க மாட்டார்கள். சுத்தமாக இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தன்னை சுற்றியிருக்கும் எல்லாத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள விரும்புவார்கள். பணம் சம்மந்தமான விஷயங்களில் இவர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

காதல் சம்மந்தமான விஷயங்களில் மாட்டிக் கொண்டால் இவர்களால் எளிதில் வெளிவர இயலாது. அனாலும், இவர்களின் காதல் பெரும்பாலும் வெற்றியில் தான் முடியும். இவர்கள் எல்லோரிடமும் அன்பாகவே நடந்து கொள்வார்கள். அறிவுத் திறன் மிகுந்தவர்களாக இருப்பார்கள். நுண்கலைகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். இவர்களிடம் பிடிவாத குணம் எப்போதாவது எட்டி பார்க்கும்.

இவர்களுக்கு இருதயம், இரத்த அழுத்தம் சம்மந்தமான நோய்கள் சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறுகள் கூட இவர்களுக்கு வரும் வாய்ப்பு உண்டு.