கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்த நபர் யாழிற்கு வந்ததால் சர்ச்சை…! 120 போின் விபரங்கள் சேகரிப்பு, தீவிர விசாரணை..!!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றய தினம் மாலை ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபர் கடந்த 7ம் திகதி தொடக்கம் 9ம் திகதிவரை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த நிலையில், மீண்டும் நீர்கொழும்பு சென்ற நிலையில் 16ம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். பின்னர் நோய் தீவிரமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கியிருந்து தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட குறித்த நபர், கடந்த 7ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற் பதற்குச் சென்றுள்ளார். அங்கு இரு நாள்கள் தங்கியிருந்த பின்னர் நீர்கொ ழும்பு திரும்பியுள்ளார். இந்நிலையில் குறித்த நபருடைய நடமாட்டங்கள், பழகிய, சந்தித்த நபர்கள் குறித்த விசாரணையை

குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலங்கையில் உள்ள சகல புலனாய்வு கட்டமைப்புக்களும் நேற்று மாலையே ஆரம்பித்திருக்கின்றன. இதன்படி யாழ்.மாவட்டத்திலும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டிருப்பதுடன், யாழ்ப்பாணத்தில் அவர் தங்கியிருந்த இடம், சந்தித்த நபர்கள், திருமண வீட்டில் கலந்து கொண்டவர்கள், என சுமார் 120 பேருடைய பெயர் பட்டியல் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்டு அவர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.