இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திர வெளவால்..!!

பொல்பித்திகம பிரதேசத்தில் தங்க நிறத்திலான விசித்திர வெளவால் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.

வண்ணாத்துப்பூச்சியைப் போன்று அளவில் சிறிய விசேட வகை வெளவால் ஒன்றே இவ்வாறு அவதானிக்கப்பட்டுள்ளது.பொல்பித்திகம பிரதேசத்தில் வீடு ஒன்றில் இந்த வெளவால் அவதானிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் வீட்டில் உள்ள சிலந்தி வலை ஒன்றில் இந்த வெளவால் சிக்கியிருந்ததாகவும் அதனை பாதுகாப்பாக மீட்டு, பறக்க விட்டதாகவும் வீட்டிலிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.இலங்கையில், இன்று கொரோனாவால் உயிரிழந்த பெண்ணும் இதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .அத்தோடு கொரோனா வைரஸ் வெளவால் மூலம் தான் பரவியது என்பதும் இன்றுவரை உறுதிசெய்யப்படாத தகவலாகவும் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.