யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மஹாராஜா நிறுவனத்தின் தலைவர் காலமானார்

இலங்கையின் பெயர்பெற்ற செல்வந்தரும் கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவரும் கிளி என்று அழைக்கப்படுபவருமான ராஜேந்திரம் ராஜமகேந்திரன் கொரோனா தொற்றுகாரணமாக, சிகிச்சை பலனின்றி காலமானார்.

இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களான சக்தி, சிரச, MTV வலையப்புக்கள் மற்றும்
இலங்கையின் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களான S-lon, Kevilton கம்பனிகள் உற்பட பல்வேறு கம்பனிகளின் உரிமையாளருமான கிளி-மகேந்திரன் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவராவார்.

இலங்கையின் புகழ்பூத்த முயற்சியான்மையாளர்களில் ஒருவராக ராஜமகேந்திரன் போற்றப்படுகின்றார்.

பிரபல தொழிலபதிரான ராஜமகேந்திரன் இலங்கையின் வர்த்தக துறையின் முன்னோடிகளில் ஒருவராவார்.