கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்..!

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று 2022 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய ரீதியில் 18 முதல் 24 மாதங்கள் வரை நீடிக்கும் என minnesota பல்கலைக்கழக தொற்று நோய் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்தக் காலப்பகுதிக்குள் மனித உடல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என எதிர்பார்ப்பதாக minnesota பல்கலைக்கழக தொற்று நோய் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, கொரோனா வைரஸ் உலக மக்கள் சனத்தொகையில் 60 முதல் 70 சதவீதத்திற்கு அதிகமானவர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் எனவும் minnesota பல்கலைக்கழக தொற்று நோய் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இந்த நிலையில், தடுப்பூசி இல்லாமல் கொரோனா வைரஸை இரண்டு வருடங்களுக்குள் கட்டுப்படுத்துவது கடினம் என minnesota பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.