கையடக்க தொலைபேசி பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவுறுத்தல்

நாளொன்றுக்கு 17 நிமிடம் படி 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் நூற்றுக்கு 60 வீதம் வரை அதிகரிக்கும் என விசேட வைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பேர்க்லி பல்கலைக்கழகத்தின் விசேட வைத்திய நிபுணர்களினால், கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துபவர்கள் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்து மேற்கொள்ளப்பட்ட 46 வெவ்வேறு ஆய்வகங்களில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

பத்து வருடங்களுக்குள் ஆயிரம் மணித்தியாலங்கள் அல்லது அண்ணளவாக ஒரு நாளைக்கு 17 நிமிடங்கள் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதனால் புற்றுநோய் உண்டாகும் ஆபத்து நூற்றுக்கு அறுபது வீதம் அதிகம் உள்ளதாக இந்த ஆய்வுகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

கையடக்க தொலைபேசி சமிக்ஞைகளிலிருந்து வரும் கதிர்வீச்சு பொறிமுறைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதனால் மூளையில் மன அழுத்தம் ஏற்பட்டு டி.என்.ஏ சேதம், புற்றுநோய் மற்றும் உயிரணு இறப்பு கூட ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.