பிரித்தானியாவில் சிக்கித் தவித்த இலங்கை மாணவர்களை ஏற்றிவர கொழும்பிலிருந்து புறப்பட்ட விமானம்..!!

பிரித்தானியாவில் நிர்கதிக்குள்ளாகியுள்ள மற்றுமொரு மாணவர்கள் குழுவினரை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக விசேட விமானம் ஒன்று பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளது. இதற்கமைய, ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான  UL -503 என்ற விமானம், இன்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கப் பயணித்துள்ளது.இந்த நிலையில், குறித்த விமானம் நாளை அதிகாலை நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நேற்றைய தினம் பிரித்தானியா நோக்கிப் பயணித்த சரக்கு விமானமொன்றும் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக, தெரிவிக்கப்படுகின்றது .