நாட்டில் கோவிட் -19 இன் நான்காவது அலை தோன்றும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மக்கள் செயற்படத் தவறினால், நாட்டில் கோவிட் -19 இன் நான்காவது அலை தோன்றும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளரான ஹேமந்த ஹேரத் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.

“பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மக்கள் பயணிக்க வேண்டும்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமையை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது.  இது தொற்றுநோயின் 4வது அலைக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வார இறுதி தொடர் விடுமுறையின் போது மக்கள் அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதுடன், பொறுப்புடன் செயற்பட வேண்டும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.