இந்த பழங்களை மறந்தும் பிரிட்ஜில் வைத்து விடாதீர்கள்! மீறினால் என்ன ஆகும் தெரியுமா?

பழங்கள் என்றாலே பொதுவாக உடலுக்கு அதிக நன்மைகளை தான் கொடுக்கும். பழங்களில் அதிகம் விரும்பி சாப்பிடுபவைகளாக மாம்பழம், முலாம்பழம் மற்றும் தர்பூசணி உள்ளது என கூறினால் அது மிகையாகாது!

ஏனெவில் வெயில் காலத்தில் அது அதிகம் விரும்பப்படுகிறது. பலரும் மாம்பழம், முலாம்பழம் மற்றும் தர்பூசணியை பிரிட்ஜில் வைப்பார்கள்.

ஆனால் அப்படி வைக்க கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா?

அதாவது தர்பூசணியை வெட்டாமல் பிரிட்ஜில் வைத்தால் அது பழத்தின் சுவை மற்றும் நிறத்தையும் மாற்றிவிடும்.

அப்படி பிரிட்ஜில் வைக்க வேண்டும் என்றால் தர்பூசணியை வெட்டி பின்னர் வைக்கலாம்.

அதே போல தான் மாம்பழமும், முலாம் பழமும் கூட..! இந்த இரு பழங்களையும் வாங்கிய பின்னர் குளிர்ந்த நீரில் முதலில் கழுவி பின் சாதாரணமாக அப்படியே வெளியில் வைக்க வேண்டும்.

அவற்றை வெட்டி குளிர்ச்சியாக மாற்ற சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். வெட்டப்பட்ட பழங்களை மூடி வைக்க மறக்காதீர்கள், ஏனெனில் அவற்றை ஒருபோதும் திறந்து வைக்க கூடாது.