கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பிரசவித்த பின்னர் மரணம்

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பிரசவித்த பின்னர் கராபிட்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த 8ம் திகதி ஹோமாகம வைத்தியசாலையில் இருந்து கராபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும், குறித்த பெண் கராபிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று உயிரிழந்துள்ளார். 7 மாத குழந்தையை சிசேரியன் மூலம் பிரசவிக்க ஹோமாகம வைத்தியசாலை மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையில், குழந்தை கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. பிரேத பரிசோதனையில் கோவிட் நிமோனியா சிறுநீரக நோய்த்தொற்று காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.