சீனாவில் கிளம்பிய புது குரங்கு பி வைரஸ்! அறிகுறிகள் என்ன? யாரை எல்லாம் தாக்கும்?

சீனாவில் கொரோனாவை தொடர்ந்து இருந்து ‘குரங்கு பி’ என்ற புது வைரஸ் ஒன்று பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்கி ஒருவர் பலியானார். சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் கிளப்பியுள்ளது.

பெய்ஜிங்கை சேர்ந்த கால்நடை மருத்துவர் குரங்கு பி வைரஸ் காரணமாக உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இவர் மார்ச் மாதம் இறந்த இரண்டு குரங்கு வகைகள் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

ஒரு மாதத்துக்கு பிறகு அவருக்கு குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து கடந்த மே மாதம் 27 ஆம் தேதி அவர் இறந்துவிட்டார். இந்த செய்தி மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

அந்தவகையில் இந்த வைரஸ் யாரை அதிகம் தாக்குகின்றது ?  அறிகுறிகள் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.     

 எப்படி கண்டறியப்பட்டது?

1932 ஆம் ஆண்டு இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. அப்போது இத்தொற்றுக்கு பாதிப்புக்குள்ளானவர்களில் 60 முதல் 80 தொற்றூகள் மட்டுமே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தகக்து.

இது மிகவும் அரிதான வைரஸ் தொற்று ஆகும். ஹெர்பஸ் வைரஸின் குழுவில் இதுவும் ஒன்று. இது மாகாக்ஸ், சிம்பன்சி மற்றூம் கபுச்சின் போன்ற குரங்குகளில் பாரம்பரியாமாகவே இருக்கும் வைரஸ்.

எப்படி உண்டாகிறது ? 

 •  மனிதர்களில் இந்த வைரஸ் குரங்குகள் கடித்தால் அல்லது அதன் கீறல்களுக்கு பிறகு பரவக்கூடும்..
 • குரங்குகளின் உமிழ்நீர், எச்சம், மலம், ரத்தம் மற்றும் சிறுநீர் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது. ஆய்வகத்தில் பாதிக்கப்பட்ட குரங்கிலிருந்து வரும் உயிரணுக்களிலிலும் இந்த வைரஸ் காணப்படலாம்.
 •   அதோடு குரங்கிலிருந்து சில மூளை திரவங்கள் உடலில் படும் போது பரவுகிறது. இந்த வைரஸானது பொருள்களின் மேற்பரப்பில் மணிக்கணக்கில் உயிர்வாழும் தன்மை கொண்டது. குறிப்பாக ஈரப்பதமாக இருக்கும் போது. 

 யாருக்கு ஆபத்து?

 • ஆய்வகங்களில் பணிபுரியும் நபர்கள்
 • கால்நடை மருத்துவர்கள்.
 • குரங்குகளுக்கு அருகில் பணிபுரியும் நபர்கள்

அறிகுறிகள் ?

இந்த வைரஸ் தாக்கிய 1 மாதத்துக்குள் அறிகுறிகள் தோன்றும். 3 முதல் 7 நாட்களிலும் தோன்றலாம். அறிகுறிகள் உடலில் இருக்கும் தொற்றைபொறுத்து வேகமாகவோ அல்லது 1 மாதத்துக்குள்ளோ இருக்கலாம்.

 • நோய்த்தொற்று இருக்கும் இடத்தின் அருகில் கொப்புளங்கள்.
 • காயத்தின் அருகே வலி, நமைச்சல் அல்லது உணர்வு இல்லாமல் இருப்பது.
 • காய்ச்சல், அதைத்தொடர்ந்து சோர்வு,24 மணி நேரம் தீவிரமான தலைவலி.
 • தசை வலி, இறுக்கம், சுவாசிப்பதில் மூச்சுத்திணறல்.மூக்கு அடைப்பு, கண்களில் நீர்வடிதல் போன்றவை இருக்கும்.
 •  அறிகுறிகள் தீவிரமாகும் போது மூளை மற்றும் முதுகெலும்புகளில் பாதிப்பை உண்டாக்கும்.
 •  நோயாளிகளுக்கு நினைவாற்றல் குறையும்.
 •   மூளை செயல்பாடு குறையும் போது நரம்பியல் அறிகுறிகள் தென்படும்.
 • சில ச மயங்களில் இது மூளை வீக்கம் அதாவது என்செபலிடிஸ் உண்டாக்கும்

 சிகிச்சை என்ன தடுக்கும் முறை என்ன?

 • குரங்கு கடித்தால் அல்லது குரங்கு கீறினால், குரங்கு இருக்கும் இடங்களில் வாழ்பவர்கள் அதன் எச்சத்தை மிதித்தால் குரங்கு பி வைரஸ் வருவதற்கான வாய்ப்பை எதிர்கொள்ளலாம். இந்த சூழ்நிலையில் முதல் உதவியாக சிகிச்சை செய்து கொள்வது அவசியம்.
 • காயம் பட்ட இடத்தில் சோப்பு போட்டு தேய்த்து உப்பு கலந்த தண்ணீர் ஊற்றி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் நன்றாக சுத்தம் செய்து விட வேண்டும். அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.