கண்டியில் ஒரே நாளில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்! திடீர் மருத்துவமனையில்

கண்டியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு பெண்ணுக்கு இரண்டு டோஸ் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டியில், உடபேராதனை தடுப்பூசி மையத்திற்கு நேற்று (ஜூலை 21) சென்ற பெண்ணுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக அந்த பெண்ணின் கணவர் பேராதனை பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒகஸ்டாவத்தையைச் சேர்ந்த பெண், தடுப்பூசி மையத்தில் மயங்கி விழுந்த நிலையில், அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அந்தப் பெண் மீண்டும் வீட்டில் வைத்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவருக்கு மயக்கம் ஏற்படுவதாகவும், கை தாங்க முடியாத வலியைத் தருவதாகவும், கை வீங்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.