தனது குழந்தைக்கு பாலில் நஞ்சை கலந்து கொடுத்த தாய் கைது!

பிறந்து 16 நாட்களேயான தனது குழந்தைக்கு தாய்பாலில் நஞ்சை கலந்து கொடுத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை சிப்பிகுளத்தில் வசிக்கும் 21 வயதான தாய் அண்மையில் அம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் பிரசவத்தை மேற்கொண்டிருந்தார். சிசு குறைந்த எடையுடன் பிறந்ததினால் குழந்தையை தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்ததாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த தாய் தினமும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வந்த நிலையில் திடீரென நஞ்சுகலந்த பாலை குழந்தைக்கு கொடுக்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட தாயாரை வருகின்ற 04ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.