நாட்டு மக்களுக்கு விடுவிக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் செயற்படுதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

அவ்வாறு பொறுப்பற்ற வகையில் மக்கள் செயற்படுவார்களாயின் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளார்.

தளர்த்தப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடுகளை பொதுமக்கள் துஸ்பிரயோகம் செய்தால் திருமணம் மற்றும் ஏனைய நிகழ்வுகளின் மீது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலையேற்படலாம்.

திருமண நிகழ்வொன்றில் 150 பேர் மாத்திரமே கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை விட அதிகளவானவர்கள் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.

தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் துஸ்பிரயோகம் செய்தமையின் காரணமாகவே கடந்த காலங்களில் வைரஸ் பரவியது.

பல பகுதிகளில் டெல்டா கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டியது பொதுமக்களின் கடமை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.