20 ரயில்வே ஊழியர்களுக்கு கொவிட் தொற்று

புகையிரத பணியாளர்களில் சாரதிகள் மற்றும் உதவி சாரதிகள் உட்பட குறைந்தது 20 ரயில்வே ஊழியர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சாரதிகள் சங்கத் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகள் அளித்த அறிவுறுத்தல்களை முறையாக செயல்படுத்த ரயில்வே அதிகாரிகள் தவறிவிட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “சாரதிகள், உதவி சாரதிகள் மற்றும் பிற ஊழியர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது கூட்டாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் ரயில்வே அதிகாரிகள் சுகாதார அதிகாரிகள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக செயல்படுத்த தவறிவிட்டனர்.”

“தவிர, ரயில்களும் பயணிகளால் முழுமையாக நிரம்பியுள்ளன, இது உண்மையான ஆபத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் கூறினார். மருதானை ரயில் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.