கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் படைத்த மகத்தான சாதனை!

இணைய வழியாக இன்று (20) இடம்பெற்ற மருத்துவ பீடங்களுக்கான அகில இலங்கை வினாவிடை போட்டியில் கிழக்கு பல்கலைக்கழகம் இறுதி சுற்றில் கொழும்பு மருத்துவ பீடத்தை எதிர் கொண்டு 10க்கு 0 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றிவாகை சூடியது , தகுதிகாண் சுற்றில் இரு பீடங்களும் சம புள்ளிகளை பெற்றிருந்ததும் குறிப்பிடதக்கது.

இப்போட்டியானது முதற்தடவையாக இலங்கை நரம்பியல் சங்கத்தால் நடாத்தப்பட்டதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. இது zoom வழி போட்டியாக இடம்பெற்றது.

இப்போட்டிக்கு மாணவர்களை Dr.அஜினி அரசலிங்கம், Dr.மயூரன் , Dr.றோஷினி ஆகியோர் தயார்படுத்தியதுடன் எமது பீடமும் பீடாதிபதியும் நிர்வாக ரீதியாக சகல ஆதரவையும் வழங்கி இருந்தது.
இப்போட்டியில் சி.லலின்ஷன் ஆர்.அபினயா பாத்திமா லூதா ஏ.எம்.அகீல் டி.தனுஷ்காந்த் பி.தயானி ஆகியோர் பங்குபற்றி இப் பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்த்திருந்தனர். இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.