யாழில் கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட் – 19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இன்றுவரை 116 பேர் கொவிட் – 19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.