பிளாக்ஹெட்ஸ், வைட் ஹெட்ஸ் முழுமையாக போக்கனுமா? இதோ சில அசத்தலான டிப்ஸ்

பொதுவாக சருமத்தின் நிறம் எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும் முகத்தில் தோன்றும் பிளாக் ஹெட்ஸ் மற்றும் வைட் ஹெட்ஸ் முகத்தின் பளபளப்பை குறைக்கும்.

இந்நிலை சருமத்துக்கு ஆழமான சுத்திரிப்பு தேவை என்பதை உணர்த்துகிறது.

மேலும் உங்கள் உடலுக்கு போதுமான நீர்ச்சத்து இல்லை என்பதற்கான அறிகுறியாகவும் எடுத்துகொள்ளலாம். சில நேரங்களில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இந்த பிரச்சனை தொடங்குகிறது.

எனவே இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. தற்போது இதை போக்கும் சூப்பரான டிப்ஸ் ஒன்றை எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.  

 தேவை

  •  மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
  •  அரிசிமாவு 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – நீர்த்தது 1 டீஸ்பூன்
  • தேன் – அரை டீஸ்பூன்

செய்முறை

  • கிண்ணத்தில் மஞ்சளுடன் அரிசிமாவு கலந்து நன்றாக கலந்து எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்றாக கலந்து இறுதியாக தேன் சேர்க்கவும்.
  • அனைத்தையும் நன்றாக கலந்து சிறிய அளவு எடுத்து பிளாக்ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் வைத்து வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்
  •  குறுக்கும் நெடுக்குமாக மசாஜ் செய்த பிறகு மந்தமான நீரில் கழுவி எடுங்கள்.

  பயன்

  • மஞ்சள் சருமத்தில் இருக்கும் அழுக்கையும் பிளாக்ஹெட்ஸ் அகற்ற உதவுகிறது. அதே நேரம் அரிசி மாவு சருமத்துக்கு உறிஞ்சும் சக்தியை அளிக்கிறது.
  • இது சருமத்திலிருக்கும் அதிகப்படியான எண்ணெயை மிக விரைவாக உறிஞ்சுவிடும்.
  • சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் தான் இந்த பிளாக்ஹெட்ஸ் வைட் ஹெட்ஸ் வருவதற்கு காரணம். எலுமிச்சைஇறந்த செல்களை நீக்குவதிலும் தேன் சருமத்துக்கு ஈரப்பதத்தையும் அளிக்கிறது.