லண்டனில் இருந்து யாழ். வந்த வைத்தியர் மரணம்!

கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் எடுத்துக் கொண்ட வைத்தியர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த வைத்தியர் யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சுவேலி பகுதியில் வசிப்பவர், லண்டனில் இருந்து விடுப்பில் வந்துள்ள அவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 வயதான குறித்த வைத்தியர் சில காலத்திற்கு முன்பு லண்டனுக்கு குடிபெயர்ந்தார்,

அவர் இலங்கைக்கு விடுப்பில் திரும்பியபோது உடல்நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அத்துடன், குறித்த வைத்தியர் கோவிட் தடுப்பூசியில் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.