இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் 43ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் 43ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் (19) கொரோனாவால் 43 பேர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தினார்.

இதன் மூலம், இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 3,870 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இறந்தவர்களில் 26 ஆண்கள் மற்றும் 17 பெண்கள் அடங்குகின்றனர்.

இறந்தவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட 31 பேரும், 30 – 59 வயதுக்குட்பட்ட 11 பேரும், மற்றும் 30 வயதிற்குட்பட்ட ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.