இனி வெங்காயம் உரிச்சா அதன் தோலை தூக்கி வீசாதீங்க! பல நன்மைகளுக்கு பயன்படுத்தலாம்

வெங்காயம் என்பது நமது அன்றாட சமையலின் பயன்படுத்தும் ஒரு பொருளாகும்.வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

இருப்பினும் , வெங்காயத்தைப் பயன்படுத்தும் போது, நாம் பெரும்பாலும் வெளிப்புறத் தோலை நீக்குவது உண்டு. ஆனால் உண்மையில் இது பல நன்மைகளை தருகின்றது என்றே கூறலாம்.

இது உங்களின் உணவுகளுக்கு ஒரு தனித்துவமான சுவையைச் சேர்ப்பது முதல், உங்கள் கூந்தலுக்கு சரியான பிரகாசத்தை அளிப்பது வரை, இந்த வெங்காயத் தோலானது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, நீங்கள் வெங்காயத் தோலை தூக்கி எறிவதை நிறுத்தி இதனை எப்படி இதனை பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். அந்தவகையில் தற்போது வெங்காயத்தோலை எப்படியெல்லாம், எதற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

  • உலர்ந்த அல்லது வறுத்த வெங்காயத் தோலின் தூளை உங்கள் உணவுகளில் (சூப்கள், வேகவைத்த காய்கறிகள் மற்றும் இறைச்சிகள், மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகள் போன்றவை) சேர்ப்பது, உங்கள் உணவின் சுவையை அதிகரிக்க உதவும்.

  •    நரை முடிக்கு வெங்காயத்தின் தோலை உரித்து தீயில், சூடாக்கி தோல்கள் கருகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர், அடுப்பை அணைத்துவிட்டு இதனை நன்றாக பொடியாக்கி கொள்ளவும்; அல்லது கையால் நசுக்கி ஒரு சல்லடை மூலம் கூட நீங்கள் சலித்து எடுத்துக் கொள்ளலாம். இந்த பொடியை கற்றாழை ஜெல் அல்லது ஹேர் ஆயிலுடன் கலந்து உங்கள் தலையில் தடவலாம். இந்த ஹேர் டை ஆனது, உங்கள் முடிக்கு உடனடியாக நிறத்தை கொடுப்பதற்கு ஒரு சரியான தீர்வாக இருக்கும். இருப்பினும், ஒன்று அல்லது இரண்டு முறை உங்களை தலையை அலசினால் இந்த நிறம் ஆனது மங்கக்கூடும்.
  •  நீங்கள் தசை வலி அல்லது உடல் வலி ஆகியவற்றால் அவதிப்பட்டால், வெங்காய தோல் கொண்டு தயார் செய்யப்பட்ட தேநீரை குடிக்கலாம். சிறிது வெங்காயத் தோலை எடுத்து அதை தண்ணீருடன் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்; தேநீர் நன்றாக கொதித்த பின்னர், இதை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். இந்த வடிகட்டிய தேநீரை, நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன் குடிக்கலாம். இவ்வாறு செய்வது, உங்கள் தசை வலியை போக்க உதவும்.
  •  வெங்காய தோல் கொண்டு தயாரிக்கப்படும் நீர் ஆனது, தூக்கத்தைத் தூண்டும். அது மட்டுமின்றி, உங்கள் நரம்புகளை குணப்படுத்தவும் இது உதவுகிறது.
  •  முடி உலர்ந்து அல்லது வறண்டு போய் காணப்படும் போது வெங்காயத் தோலை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்கவும்; இந்த கலவை பழுப்பு நிறமாக மாறியதும், அடுப்பை அணைத்து இதை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பின்னர், இதை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் பொழுது இதை உங்கள் உச்சந்தலையில் நீங்கள் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்திய பிறகு நீங்கள் மாற்றத்தைக் காணலாம்.
  • வெங்காயத் தோல்களை ஒரு பெரிய தொட்டியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு இயற்கையான உரமாக மாறிவிடும். இந்த உரத்தில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கும். மேலும், வீட்டில் தயார் செய்யப்பட்ட இந்த உரமானாது உங்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.