ஒன்லைன் மூலம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி!

ஒன்லைன் ஊடாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறப்பு நிபுணத்துவம் பெற்ற தனியார் துறையில் உள்ளவர்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கையின் ஏற்றுமதி மேம்பாட்டு சபை, வர்த்தக துறை, ஆகியவைகளே நிபுணத்துவம் பெற்ற தனியார் துறையினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு வருகின்றன.

இந்த கலந்துரையாடலின் பின்னர் மின் வணிகத்தை சட்டபூர்வமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் தற்போதைய மின் வணிகத்தை கருத்திற் கொண்டு, இலங்கையிலும் அவ்வாறான நடைமுறையை பின்பற்றி வரி விதித்தல் உட்பட பல்வேறு நடைமுறைகளை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.