சற்று முன்னர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா தொற்றாளர்கள்..!!

கொரோனா தொற்றுறுதியான புதிய தொற்றாளர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 755 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றுறுதியானவர்களில் 10 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதன்படி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியினை தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.