சினோபார்ம் தடுப்பூசி தொடர்பாக ஆய்வில் வெளிவந்த தகவல்

கொவிட் வைரஸ் தொற்றுக்கு எதிரான சினோபார்ம் தடுப்பூசி மிகவும் வினைத்திறனானது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களில் 95 வீதமானவர்களுக்கு பிறபொருளெதிரி வலுவாகியுள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிர்க்கலன் பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சினோபார்ம் தடுப்பூசி டெல்டா திரிபிற்கு எதிரகாவும் சிறந்த முறையில் செயற்படுவதாக ஆய்வுகள் மூலம் மேலும் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான நீலிகா மாலவ்கே மற்றும் சந்திம ஜீவன்தர ஆகியோரினால் இந்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளை பெற்றுக்கொண்டவர்களில் 95 வீதமானவர்களுக்கு மிகவும் அதிகளவிலான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி கொவிட் வைரஸ் தொற்றின் பல்வேறு திரிபுகளையும் முறியடிக்கக்கூடிய வகையிலானது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.