எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பாடசாலைகள் திறக்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

ஆசிரியர்களில் 63 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த வருடம் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை ஓகஸ்ட் 7ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தக் கால எல்லை எதிர்வரும் 31ம் திகதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.