ஒக்ஸிஜன் தேவையுடன் 50 வீத கோவிட் நோயாளிகள் கொழும்பு வைத்தியசாலையில்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கொவிட் நோயாளிகளுக்கு ஒக்ஸிஜன் தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது.

சிகிச்சை பெறும் கொவிட் நோயாளிகளின் 50 வீதமானோருக்கு ஒக்ஸிஜன் தேவைப்படுவதாக வைத்தியர் உப்புல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அங்கு சிகிச்சை பெறும் 200 நோயாளிகளில் 100 பேர் ஒக்ஸிஜன் பயன்படுத்த வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் நோயாளிகள் அதிகரித்துள்ளதாக வைத்தியர் உப்புல் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.