கழுத்தில் கருப்பாக உள்ளதா? இதனை மறைக்க இதோ சூப்பர் டிப்ஸ்..!

நம்மில் பல பேருக்கு முகம் வெள்ளை நிறமாக அழகாக இருந்தாலும், கழுத்துப் பகுதி மட்டும் கருப்பு நிறம் நிறைந்ததாக இருக்கும். வெயிலில் அதிக நேரம் அலைவதாலும், செயின் போன்றவற்றை அணிவதாலும் அந்த இடத்தில் கருமையாகிவிடுகிறது.

இந்த கருமையை வேறும் சோப்பு கொண்டு போக்குவது கடினம். ஒரு சில இயற்கை பொருட்களை வைத்து எளியமுறையில் கழுத்து கருப்பினை போக்க முடியும்.

அந்தவகையில் தற்போது கழுத்து கருமையை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்று பார்ப்போம்.

  • காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் எடுத்து கொள்ளவும், அவற்றை ஒரு காட்டன் துணியால் நனைத்து, அந்த துணியை கழுத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை 3 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை செய்ய வேண்டும். இது கழுத்தை மிருதுவாக வைப்பதுடன் கழுத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய உதவுகிறது.
  • ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் தண்ணீரை சூடு படுத்தி எடுத்து கொள்ளவும். அவற்றில் சுத்தமான காட்டன் துணியை நனைத்து, கழுத்தில் சிறிது நேரம் ஒத்தி எடுத்தோம் என்றால் கழுத்தில் கருமை மறையும். பொதுவாக கழுத்திற்கு ஏதேனும் பேக் போடுகின்றோம் என்றால், அப்போது இந்த முறையை செய்து விட்டு பின்பு பேக் போட்டு கொண்டோம் என்றால் நல்ல பலன் கிடைக்கும்.
  • கழுத்தில் இருக்கும் கருமையை நீக்குவதற்கு சர்க்கரை மற்றும் எலுமிச்சை இரண்டும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து கொள்ளவும். பின்பு எலுமிச்சை பழத்தை பாதியாக அறிந்து, சர்க்கரையில் நனைத்து கழுத்தில் 5 முதல் 10 நிமிடம் வரை மசாஜ் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருமை மறைந்து விடும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரவும்.
  • ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் கடலை மாவை எடுத்து கொள்ளவும். அவற்றில் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பாலை கலந்து கொள்ளவும். பின்பு நான்கு துளி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும். இந்த கலவையை கழுத்தில் தடவி 10 முதல் 15 நிமிடம் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும் இவ்வாறு செய்தால் கழுத்தில் இருக்கும் கருமை நிறம் மறைந்து விடும்.