சளி, வீசிங், ஆஸ்துமா போன்றவற்றில் இருந்து உடனடி விடுதலை வேண்டுமா? அப்போ கட்டாயம் இதை செய்யுங்க

இன்றைய காலத்தில் பலர் சளித்தொல்லை, வீசிங் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்கள். மாறிவரும் காலநிலையில் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் கூட இப்பிரச்சினைக்கு ஆளாகுகின்றனர்.

இதற்காக அடிக்கடி வைத்தியசாலை செல்வது இந்த சமயங்களில் நல்லதல்ல. வீட்டில் இருந்து கூட ஒரு சில இயற்கை பொருட்களை வைத்து சரி செய்ய முடியும்.

அந்தவகையில் தற்போது உடலில் உள்ள சளியை எப்படி எளியமுறையில் போக்கலாம் என பார்ப்போம்.

  • பாலில் நிறைய கெமிக்கல் கலந்து இருப்பதனால் இது உடலில் கேடு விளைவிக்கின்றது. இது சளி உற்பத்தியை அதிகப்படுத்துகின்றது. இதனை தவிர்ப்பது நல்லது.
  •  பிரய்லர் கோழி முட்டையும் அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. அதுவும் இரவு நேரத்தில் முட்டை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
  •  சாப்பாட்டில் அதிகமாக ரவை, மைதா, கோதுமை பொருட்களை போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுவும் கோதுமை பொருட்களை ஆபத்தை தான் ஏற்படுத்தும்.
  • தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் ஆவாரம் பூவை போட்டு வடிக்கட்டி குடிக்க வேண்டும். அதில் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன், தேன் 2 ஸ்பூ, சிறிதளவு மிளகு போன்றவற்றை சேர்த்து குடிக்க வேண்டும்.
  • காலை குளிர்ச்சிக்காக சாப்பிடுவதற்கு முன் திரிபலா சூரணம் எடுக்க வேண்டும். இதனை 1 வாரம் பின்பற்றுவதனால் நல்ல பயன் கிடைக்கும்.
  •  சூடான நல்லெண்ணை எண்ணெய், தும்ப பூ, 2 மிளகு போட்டு எண்ணெய் தயார் செய்து மூக்கில் 4 சொட்டு விடுவது செய்வது நல்லது. இது வீசிங் பிரச்சினையை போக்கும்.
  •  வெள்ளை அரிசிக்கு பதிலாக பழைய சோறு எடுப்பது நல்லது. பிரவுன் கலர் அரிசியில் பழைய சாதம் செய்து மாலை வேளை சாப்பிட்டு வரலாம். இது சளியை குறைக்கும்.